Loading...
 

வழிகாட்டல் குறித்த அறிமுகம்

 

 

வழிகாட்டல் என்றால் என்ன?

வழிகாட்டுதல் என்பது அதிக அனுபவம் வாய்ந்த உறுப்பினர்கள் தங்கள் நேரம், கவனம், அறிவு, வழிகாட்டுதல், நுண்ணறிவு மற்றும் ஆலோசனைகளை வழங்கும் ஒரு செயல்முறையாகும். புதிய உறுப்பினர்களுக்கு, Agora-வில் தொடங்க இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அவர்களைப் பொறுத்தவரை, முழு Agora உலகமும் சற்று பதட்டத்தைத் தரக்கூடிய விஷயமாக இருக்கலாம், எங்கே தொடங்குவது அல்லது சமூகத்தில் எவ்வாறு ஒன்றிணைவது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். வழிகாட்டியாக திகழுபவர்கள் நான்கு அடிப்படை பகுதிகளில் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்:

  • Agora இயங்குதளம் - புதிய உறுப்பினர்கள் வெவ்வேறு Agora அமைப்புகளான உரையாடல், மன்றங்கள், சமூக ஊடக சேனல்கள், கிளப் மேலாண்மை போன்றவற்றின் வழியே உதவுகிறார்கள்.
  • கிளப் கலாச்சாரம் - இவர்கள் புதிய உறுப்பினர்களுக்கு தங்கள் கிளப் எவ்வாறு செயல்படுகிறது, என்ன குறிப்பிட்ட கலாச்சார அம்சங்கள் மற்றும் மரபுகள் உள்ளன, எப்படி உதவி கேட்க வேண்டும், சந்திப்புகளில் பாத்திரங்களாக பங்கெடுப்பதற்கு பதிவு செய்வது எப்படி என்று விளக்குகிறார்கள். அவர்கள் புதிய உறுப்பினரை கிளப்பின் Agora அல்லாத சமூக நடவடிக்கைகளுக்கு அறிமுகப்படுத்துகின்றனர் (எ.கா., கூட்டுறவு, ஒன்றுகூடல், விருந்துகள்), முதலியன.
  • Agora கல்வித் திட்டம் - கல்வித் திட்டம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, கல்வி செயல்திட்டங்களை எங்கே கண்டுபிடிப்பது, வெவ்வேறு பாத்திரங்களை எவ்வாறு சரியாகச் செய்வது, ஆரம்ப செயல்திட்டங்கள் பற்றிய ஆலோசனை போன்ற விஷயங்கள் குறித்து வழிகாட்டுதல் வழங்குவார்கள்.
  • Agora உலகளாவிய சமூகம் - உலகளாவிய Agora சமூகத்தில் கிளப் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகிறது, என்னென்ன போட்டிகள் மற்றும் பல கிளப் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, பிராந்திய மற்றும் சர்வதேச மாநாட்டு தகவல் போன்றவை குறித்து வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • கிளப்பில் புதிய உறுப்பினர் தங்கள் குறிப்பிட்ட நோக்கங்களை அடைய அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்.

 

வழிகாட்டி (ஆசான்) ஏன் தேவை?

வழிகாட்டுதல் என்பது குறுகிய காலத்தில் ஒரு திறனைக் கற்றுக்கொள்வதற்கான மிகவும் பயனுள்ள நுட்பங்களில் ஒன்றாகும்.

சர் கென் ராபின்சனின் கருத்துப்படி (இங்கிலாந்து எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் அரசாங்கம், இலாப நோக்கற்ற நிறுவனம், கல்வி மற்றும் கலை அமைப்புகள் ஆகியவற்றுக்கு கலைகள் குறித்த கல்வியில் சர்வதேச ஆலோசகர்), வழிகாட்டிகள் நான்கு அடிப்படை பாத்திரங்களை வழங்குகிறார்கள்:

அடையாளம் காண்பது - வழிகாட்டியாக திகழுபவர்கள் ஆர்வம் அல்லது சந்தோஷத்தின் தீப்பொறியை அடையாளம் கண்டு, தனிநபரின் திறன் மற்றும் ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய ஒழுக்கத்தின் குறிப்பிட்ட கூறுகளை மேம்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவ முடியும் ...

ஊக்கமளிப்பது- ‘வழிகாட்டியாக திகழுபவர்களைச் சந்திப்பதற்கு முன்பு, சாத்தியமற்றதாக அல்லது சாதிக்க முடியாததாக தோன்றிய ஒரு விஷயத்தை நம்மால் அடைய முடியும் என்று கூறி இவர்கள் நம்மை வழிநடத்துவார்கள். அதிக நேரம் தன்மேலேயே சந்தேகப்படவோ அல்லது நம் கனவுகள் அந்தளவு மிகப் பெரியதோ என்ற எண்ணத்திற்கு நாம் அடிபணிய அனுமதிக்க மாட்டார்கள். நம்மிடம் ஏற்கனவே உள்ள திறமைகளையும் நாம் தொடர்ந்து கடினமாக உழைத்தால் நாம் என்ன சாதிக்க முடியும் என்பதை நினைவூட்டுவதற்காக அவர்கள் தம்முடைய பக்கம் நிற்பார்கள் ...'

எளிதாக்குவது-‘வழிகாட்டிகளாக திகழுபவர்கள் நமக்கு அறிவுரைகளையும் நுணுக்கங்களையும் வழங்குவதன் மூலமும், நமக்கு வழி வகுத்து கொடுப்பதன் மூலமும் நம்மை வழிநடத்திச் செல்ல உதவுவார்கள். மேலும் நாம் கொஞ்சம் தடுமாறும்போது நம் பக்கம் நின்று, நாம் அதிலிருந்து மீளவும் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் உதவுவார்கள்...’

நீட்டிக்கச் செய்வது - ‘திறமையான வழிகாட்டிகள் நாம் நமது எல்லைகளாக பார்க்கும் விஷயங்களை கடந்து சென்று சாதிக்க நமக்கு உந்து சக்தியாக இருப்பார்கள். சுய சந்தேகத்திற்கு அடிபணிய அவர்கள் நம்மை அனுமதிக்காததால், நம்மால் முடிந்ததை விட நாம் குறைவான விஷயங்களை செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறார்கள். நமது இலக்கு ஒருபோதும் நமது முயற்சிகளின் "சராசரி"  அளவாக இருக்கக்கூடாது என்பதை உண்மையான வழிகாட்டி நமக்கு நினைவூட்டுவார்...'

வழிகாட்டியாக (ஆசானாக) திகழுபவர்:

  • நீங்கள் தொடங்கும் அதே பாதையை ஏற்கனவே கடந்து வந்தவர்கள் - அவர்களுக்கு என்னென்ன விஷயங்கள் வேலை செய்யும், எது செய்யாது என்று தெரியும். நீங்கள் வலி எதனையும் அனுபவிக்காமல், அதிலிருந்து விஷயங்களை கற்றுக்கொள்ளக்கூடிய தவறுகளை அவர்கள் ஏற்கனவே செய்துவிட்டார்கள்.
  • ஏற்கனவே தொடர்புகளின் நெட்வொர்க்கை உருவாக்கிவிட்டார்கள். உங்கள் சமூக செயல்திட்டத்திற்கு ஒரு வழிகாட்டியை நீங்கள் தேர்வு செய்தால் இது மிகவும் முக்கியமானது. உங்களுக்காக கதவுகளைத் திறக்கக்கூடிய சில முக்கிய நபர்களை உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
  • உறுதியாக இருக்கவும், நிலையாக இருக்கவும், ஒரு வழக்கத்தை உருவாக்கவும் உங்களுக்கு உந்துசக்தியாக இருப்பார்.
  • உங்களுக்கான வெற்றி வாய்ப்புகளை பெரிதும் அதிகரிப்பவர்.
  • உங்கள் சொற்பொழிவு அல்லது செயல்திட்டம் பற்றி நேர்மையான மற்றும் பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குபவர். நீங்கள் வழிகாட்டிக்கு எதுவும் கொடுக்கவில்லை என்பதால், அவர் உங்களுக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை, மேலும் அவர் தவறாகக் கருதும் விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளவும் தேவையில்லை.

Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Tuesday September 28, 2021 17:50:13 CEST by shahul.hamid.nachiyar.